மணவாளக்குறிச்சி அருகே மின்னல் தாக்கி கிறிஸ்தவ ஆலய கோபுரம் சேதம்


மணவாளக்குறிச்சி அருகே மின்னல் தாக்கி கிறிஸ்தவ ஆலய கோபுரம் சேதம்
x
தினத்தந்தி 2 May 2019 4:30 AM IST (Updated: 1 May 2019 8:56 PM IST)
t-max-icont-min-icon

மணவாளக்குறிச்சி அருகே மின்னல் தாக்கி கிறிஸ்தவ ஆலய கோபுரம் சேதம் அடைந்தது.

மணவாளக்குறிச்சி,

வங்கக்கடலில் உருவான ‘பானி’ புயல் சின்னம் காரணமாக குமரி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக சூறைக்காற்றுடன் ஆங்காங்கே பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் கடல் சீற்றம், சூறைக்காற்று காரணமாக மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

நேற்று அதிகாலையில் மணவாளக்குறிச்சி சுற்று வட்டார பகுதிகளில் இடி–மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

இந்த நிலையில் மணவாளக்குறிச்சி அருகே சின்னவிளை கடற்கரை கிராமத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தை திடீரென மின்னல் தாக்கியது. இதில் கிறிஸ்தவ ஆலய கோபுரத்தின் ஒரு பகுதி இடிந்து சேதம் அடைந்தது.

மேலும், ஆலயத்தின் சுவர்களிலும் விரிசல் ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அப்பகுதி முழுவதும் பரவியதால், ஏராளமான பொதுமக்கள் ஆலயத்தின் முன்பு திரண்டனர். அப்போது கோபுரத்தின் சேதமடைந்த பகுதிகள் ஆலய வாசலில் சிதறி கிடந்தது. மின்னல் தாக்கி கிறிஸ்தவ ஆலய கோபுரம் சேதமடைந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story