ஓசூரில், திருமணமான ஒரு ஆண்டில் வட மாநில இளம்பெண் தற்கொலை - உதவி கலெக்டர் விசாரணை


ஓசூரில், திருமணமான ஒரு ஆண்டில் வட மாநில இளம்பெண் தற்கொலை - உதவி கலெக்டர் விசாரணை
x
தினத்தந்தி 2 May 2019 4:30 AM IST (Updated: 2 May 2019 2:45 AM IST)
t-max-icont-min-icon

ஓசூரில், திருமணமான ஒரு ஆண்டில் வட மாநில இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக, உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

ஓசூர்,

ஓசூரில் திருமணமான ஒரு ஆண்டில் வட மாநில இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் விமல்ராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.

சத்தீஸ்கர் மாநிலம் பலோத்பஜார் அருகே உள்ள மந்தீப் நாகர்தாலா பகுதியை சேர்ந்தவர் யுகேல் கிஷோர். இவரது மனைவி செந்தார்யா (வயது 21). இவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு ஆண்டு ஆகிறது. குழந்தை இல்லை. கணவன் - மனைவி 2 பேரும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் திருச்சிப்பள்ளியில் உள்ள தனியார் கோழிப்பண்ணையில் தங்கி வேலை செய்து வந்தனர்.

இந்த நிலையில் கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த செந்தார்யா கோழிப்பண்ணையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த ஓசூர் அட்கோ போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

திருமணம் ஆகி ஒரு ஆண்டில் இளம்பெண் இறந்துள்ளதால் இது தொடர்பாக ஓசூர் உதவி கலெக்டர் விமல்ராஜ் மற்றும் ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மீனாட்சி ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story