சிறுமி பாலியல் பலாத்காரம்; போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
வில்லியனூர்,
புதுச்சேரி வேல்ராம்பட்டு துலுக்கானத்தம்மன் நகரைச் சேர்ந்தவர் சத்தியராஜ் (வயது 19). இவர் வில்லியனூரைச் சேர்ந்த 16 வயது சிறுமியுடன் நட்பாக பழகி வந்துள்ளார். பின்னர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த சிறுமி 2 மாத கர்ப்பமானார்.
இதனைத் தொடர்ந்து அந்த சிறுமி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சத்தியராஜை வலியுறுத்தினார். ஆனால் சத்தியராஜ் கர்ப்பத்தை கலைத்துவிட்டு, அந்த சிறுமியை சந்திப்பதை தவிர்த்து வந்தார். இது பற்றி அந்த சிறுமி தனது தயாரிடம் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், மகள் பாதிக்கப்பட்டது குறித்து புதுவை குழந்தைகள் நலக் குழுவிடம் புகார் அளித்தார்.
அதன்பேரில் குழந்தைகள் நலக்குழு தலைவர் ராஜேந்திரன் விசாரணை நடத்தினர். அதில் சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி, சத்தியராஜ் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து குழந்தைகள் நலக்குழு தலைவர், சிறுமியை ஏமாற்றிய சத்தியராஜ் மீது நடவடிக்கை எடுக்க சீனியர் போலீஸ் சூப்பிரண்டுக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் நடவடிக்கை எடுக்க சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வகுப்தா வில்லியனூர் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சத்தியராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Related Tags :
Next Story