ஈரோட்டில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை


ஈரோட்டில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x
தினத்தந்தி 9 May 2019 4:56 AM IST (Updated: 9 May 2019 4:56 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் தூக்குப்போட்டு பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.

ஈரோடு,

ஈரோடு வைராபாளையம் கல்யாண சுந்தரம் வீதியை சேர்ந்தவர் ராமசந்திரன் (வயது 51). வியாபாரி. இவருடைய மனைவி உமாமகேஸ்வரி (45). ராமசந்திரன் நேற்று காலை வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். அப்போது வீட்டில் இருந்த உமாமகேஸ்வரி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதைப்பார்த்ததும் அவருடைய மகன் சத்தியமூர்த்தி அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உமாமகேஸ்வரியை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே உமாமகேஸ்வரி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், கடன் தொல்லையால் உமாமகேஸ்வரி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story