மாவட்ட செய்திகள்

தங்க தமிழ்ச்செல்வன் தங்கியிருந்த விடுதியில் சோதனை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி + "||" + Check at the thangatamilselvan staying hotel

தங்க தமிழ்ச்செல்வன் தங்கியிருந்த விடுதியில் சோதனை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி

தங்க தமிழ்ச்செல்வன் தங்கியிருந்த விடுதியில் சோதனை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி
மதுரையில் தங்க தமிழ்ச்செல்வன் தங்கியிருந்த விடுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை,

மதுரை திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், கடந்த சில தினங்களாக மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருக்கிறார். இந்த நிலையில் அவர் தங்கிய விடுதியில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பரிசு பொருட்கள் மற்றும் பணம் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்தது.

இதைத்தொடர்ந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று மாலை 4.30 மணி அளவில் தனியார் விடுதிக்கு சென்று சோதனை செய்தனர். விடுதியில் தங்க தமிழ்ச்செல்வன் தங்கியுள்ள அறை மட்டும் இல்லாமல் அனைத்து அறைகளிலும் சோதனை மேற்கொண்ட தேர்தல் பறக்கும் படையினர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு சொந்தமான காரிலும் சோதனை நடத்தினார். சுமார் 1 மணி நேரம் இந்த சோதனை நடந்ததாக தெரிகிறது.

சோதனையின் முடிவில் பணமோ, பொருளோ எதுவும் கைப்பற்றப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாரிகளின் இந்த சோதனையால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சோதனையின்போது தங்க தமிழ்ச்செல்வன் வெளியே சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. ‘நிபா’ வைரஸ் பரவாமல் தடுக்க பஸ், ரெயில் நிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்ய நடவடிக்கை; சுகாதாரத்துறை இயக்குனர் ராமன் தகவல்
‘நிபா’ வைரஸ் பரவாமல் தடுக்க பஸ், ரெயில் நிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை இயக்குனர் ராமன் தெரிவித்துள்ளார்.
2. வைகையாற்றில் மணல் அள்ளுவதை தடுக்க 4 இடங்களில் சோதனைச்சாவடி அமைத்து கண்காணிப்பு, விவசாயிகள் வலியுறுத்தல்
வைகையாற்றில் மணல் அள்ளுவதை தடுக்க 4 இடங்களில் சோதனைச்சாவடி அமைத்து கண்காணிக்க வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
3. கார்பைடு கல் வைத்து மாம்பழங்கள் பழுக்க வைக்கப்படுகிறதா? பெரிய மார்க்கெட்டில் அதிகாரிகள் திடீர் சோதனை
கார்பைடு கல் வைத்து மாம்பழங்கள் பழுக்க வைக்கப்படுகிறதா? என்பது குறித்து புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள்.
4. ஆசிய போட்டியில் வெள்ளி வென்ற இந்திய மல்யுத்த வீராங்கனை ஊக்க மருந்து சோதனையில் சிக்கினார்
பெண்களுக்கான 53 கிலோ உடல் எடைப்பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை ரீனாவிடம் நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனையில் அவர் தோல்வியை சந்தித்துள்ளார்.
5. நவீன கருவி மூலம் போலீசார் சோதனை அதிவேகமாக வந்த வாகனங்களுக்கு அபராதம்
கடற்கரை சாலையில் அதிகவேகமாக வந்த வாகனங்களை போக்குவரத்து போலீசார் நவீன கருவி மூலம் கண்காணித்து அபராதம் விதித்தனர்.