பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் முதிர்வு தொகையை பயனாளிகள் பெற்று கொள்ளலாம் கலெக்டர் தகவல்


பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் முதிர்வு தொகையை பயனாளிகள் பெற்று கொள்ளலாம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 15 May 2019 4:15 AM IST (Updated: 15 May 2019 12:41 AM IST)
t-max-icont-min-icon

பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் முதிர்வு தொகையை பயனாளிகள் பெற்று கொள்ளலாம் என கலெக்டர் ஆனந்த் கூறி உள்ளார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட சமூக நல அலுவலகம் மூலம் 1995-ம் ஆண்டு முதல் 1999-ம் ஆண்டு வரை பழைய பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் ரூ.1,500-க்கு வைப்புத்தொகை பத்திரம் வினியோகம் செய்யப்பட்டது.

இதை வாங்கியவர்களில் 18 வயது பூர்த்தி அடைந்த பயனாளிகள் அதற்கான முதிர்வு தொகையை பெற்று கொள்ளலாம். முதிர்வு தொகையை பெற வைப்புத்தொகைக்கான அசல் பத்திரம், ஆதார் அட்டை நகல், 10-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் உள்ளிட்ட ஆவணங்கள் மற்றும் 2 புகைப்படங்களுடன் மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரில் அணுக வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story