முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகளில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்


முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகளில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 16 May 2019 4:09 AM IST (Updated: 16 May 2019 4:09 AM IST)
t-max-icont-min-icon

முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகளில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

புதுக்கோட்டை,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப நல்ல பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகள் பின்வரும் இடங்களில் செயல்பட்டு வரு கின்றன. மாணவர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி சென்னை, திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. மாணவிகளுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி சென்னை மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

இந்த முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகளில், காலியாக உள்ள விளையாட்டுகளில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனையாக விளங்குவதற்கு 6, 7, 8-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கான தேர்வு வருகிற 21-ந்தேதி காலை 8 மணிக்கு சென்னையிலுள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் நடைபெற உள்ளது.

மாநில அளவிலான தேர்வு

மாணவர்களுக்கான விளையாட்டு போட்டியில் தடகளம், இறகுப்பந்து, குத்துச்சண்டை ஜிம்னாஸ்டிக்ஸ், டென்னிஸ் மற்றும் நீச்சல் போட்டியும், மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டியில் தடகளம், இறகுப்பந்து, மேஜைப்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியும் நடத்தப்பட உள்ளது. விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் உள்ள மாணவ-மாணவிகளுக்கு 2019-20-ம் ஆண்டுக்கு உரிய விண்ணப்ப படிவங்களை www.sdat.tn.gov.in என்ற இணைய தளம் மூலம் ஆன்லைன் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து 20-ந்தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் 21-ந்தேதி காலை 8 மணி அளவில் மாநில அளவிலான தேர்வு நடைபெறும் போது, நேரில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், சென்னை என்ற முகவரியில் ஆஜராக வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறினார். 

Next Story