ஊராட்சி நிர்வாகம் அகற்றிய தண்ணீர் பந்தல் மீண்டும் அமைக்கப்பட்டது
கொத்தமங்கலத்தில் இளைஞர்களால் அமைக்கப்பட்டு ஊராட்சி நிர்வாகத்தால் அகற்றப்பட்ட பனை ஓலை தண்ணீர் பந்தல் தினத்தந்தி செய்தி எதிரொலியால் மீண்டும் அமைக்கப்பட்டது.
கீரமங்கலம்,
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் வாடிமாநகர் கடைவீதியில் பொதுமக்களின் தாகம் தீர்க்க அப்பகுதி இளைஞர்களால் பனை ஓலையில், பந்தல் அமைத்து மண் பானையில் குடிதண்ணீர் வழங்கப்பட்டது. இந்த தண்ணீர் பந்தலால் அந்த பகுதி பொதுமக்கள், பஸ் பயணிகள் தாகம் தீர்த்து கொண்டனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஊராட்சி நிர்வாகத்தால் தண்ணீர் பந்தல் அகற்றப்பட்டு கிடந்தது. அதனால் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்களும் குடி தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டனர்.
இளைஞர்களால் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலை அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டதாக கூறி ஊராட்சி நிர்வாகம் அகற்றிவிட்டது என்பதை நேற்று தினத்தந்தியில் படங்களுடன் செய்தி வெளியிடப்பட்டது. இந்த நிலையில் அப்பகுதி பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் இளைஞர்கள் அதே இடத்தில் பனை ஓலை பந்தல் அமைத்து தென்னை மர இருக்கைகளில் மண் பானைகளில் தண்ணீர் வைக்கப்பட்டு இருந்தது. அதனால் தண்ணீர் குடித்து பொதுமக்கள் தாகம் தீர்த்து வருகின்றனர்.

Related Tags :
Next Story