25 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


25 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 18 May 2019 4:00 AM IST (Updated: 17 May 2019 4:34 PM IST)
t-max-icont-min-icon

பனப்பாக்கம் பகுதியில் 25 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பனப்பாக்கம், 

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பனப்பாக்கம் பகுதியில் விற்பனை செய்யப்படுகிறதா என்று பேரூராட்சி செயல் அலுவலர் சம்பத்குமார் தலைமையில் அதிகாரிகள் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடைகளில் விற்பனைக்கு வைத்து இருந்த 25 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


Next Story