சேத்துப்பட்டில் துணிகரம் ஏ.சி. மெக்கானிக் வீட்டில் 50 பவுன் நகை திருட்டு
சென்னை சேத்துப்பட்டில் ஏ.சி. மெக்கானிக் வீட்டில் 50 பவுன் நகை திருட்டு போனது.
சென்னை,
சென்னை சேத்துப்பட்டு அப்பாராவ் தோட்டம் 1-வது தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 32). இவர், ஏ.சி. மெக்கானிக் ஆவார். பட்டதாரியான இவருடைய மனைவி ஜானகி, அம்பத்தூரில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். கடந்த 12-ந்தேதி சதீஷ்குமாரும், அவருடைய மனைவி ஜானகியும் வெளியூர் சென்றுவிட்டனர். வீட்டை பூட்டிவிட்டு சாவியை கதவு அருகே உள்ள ஜன்னலில் வைத்துவிட்டு சென்றனர்.
நேற்று காலையில் சதீஷ்குமாரும், ஜானகியும் வீடு திரும்பினார்கள். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 50 பவுன் தங்க நகை மற்றும் ரூ.1¼ லட்சத்தை மர்மநபர்கள் திருடிச்சென்று இருப்பது தெரிந்தது.
ஜன்னலில் வைக்கப்பட்டிருந்த சாவி மூலம் கதவை திறந்து உள்ளே புகுந்து கைவரிசையை காட்டி உள்ளனர். இந்த துணிகர திருட்டு சம்பவம் தொடர்பாக சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story