திருச்சியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்து கைவரிசை: நெல்லையில் பெண்களிடம் நகை பறித்த 2 பேர் கைது 8 பவுன் மீட்பு
திருச்சியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்து, நெல்லையில் பெண்களிடம் நகை பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 8 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர்.
நெல்லை,
நெல்லை மாநகரில் பாளையங்கோட்டை, பெருமாள்புரம் பகுதியில் அடிக்கடி தனியாக நடந்து சென்ற பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்கள் நடந்தன. இதில் சில வழக்குகளில் கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வந்தனர். குறிப்பாக கடந்த 2018-ம் ஆண்டு நடந்த வழிப்பறி சம்பவங்களில் துப்பு கிடைக்காததால், அதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து பெண்களிடம் நகையை பறித்துக் கொண்டு தப்பி சென்ற விவரம் தெரியவந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த கும்பல் நெல்லைக்கு வந்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து பாளையங்கோட்டையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில், போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர். அப்போது திருச்சி பதிவு எண் கொண்ட ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்களை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். மேலும் அவர்களிடம் 8 பவுன் தங்க சங்கிலியும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 2 பேரையும் போலீசார், பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் கரூரைச் சேர்ந்த கண்ணன் மகன் கார்த்திக் ராஜா (வயது 24), திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியைச் சேர்ந்த சகாயராஜ் மகன் ராஜா (26) என்பது தெரிய வந்தது. இவர்கள் 2 பேரும் பாளையங்கோட்டை, பெருமாள்புரம் பகுதியில் தனியாக நடந்து சென்ற பெண்களிடம் நகைகளை பறித்ததும் தெரிய வந்தது.
மேலும் இவர்கள் திருச்சியில் இருந்தே மோட்டார் சைக்கிளில் நெல்லைக்கு வந்து, பெண்களிடம் நகைகளை பறித்து விட்டு, மீண்டும் மோட்டார் சைக்கிளிலே திருச்சிக்கு தப்பி சென்றதும் தெரிய வந்தது. இவர்கள் நகைகளை விற்ற பணத்தில் ஆடம்பரமாக வாழ்ந்துள்ளனர்.
இதையடுத்து கார்த்திக் ராஜா, ராஜா ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து, நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 8 பவுன் நகை மற்றும் மோட்டார் சைக்கிள் மீட்கப்பட் டது.

Related Tags :
Next Story