காஞ்சீபுரம் ஓட்டு எண்ணும் பணிகள் குறித்து தேர்தல் பணியாளர்களுக்கான பயிற்சி கலெக்டர் தலைமையில் நடந்தது


காஞ்சீபுரம் ஓட்டு எண்ணும் பணிகள் குறித்து தேர்தல் பணியாளர்களுக்கான பயிற்சி கலெக்டர் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 19 May 2019 10:30 PM GMT (Updated: 19 May 2019 3:44 PM GMT)

ஓட்டு எண்ணும் பணிகள் குறித்து தேர்தல் பணியாளர்களுக்கான பயிற்சி கலெக்டர் பொன்னையா தலைமையில் நடந்தது.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் நாடாளுமன்ற தொகுதி, திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்கான ஓட்டு எண்ணும் பணிகள் காஞ்சீபுரம் அண்ணா என்ஜினீயரிங் பல்கலைக் கழக உறுப்பு கல்லூரியிலும், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி ஓட்டு எண்ணிக்கை தண்டலம் ராஜலட்சுமி என்ஜினீயரிங் கல்லூரியிலும் வருகிற 23–ந் தேதி நடக்கிறது.

ஓட்டு எண்ணும் பணிகள் குறித்து தேர்தல் பணியாளர்களுக்கான பயிற்சி மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான பொன்னையா தலைமையில் நடத்தப்பட்டு அவர்களுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டது.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சுந்தரமூர்த்தி, காஞ்சீபுரம் சப்–கலெக்டர் சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரி ஸ்ரீதர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) நாராயணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) அமீதுல்லா மற்றும் அனைத்து உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் (துணை கலெக்டர் நிலை) அனைத்து உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் (தாசில்தார் நிலை) கலந்து கொண்டனர்.

Next Story