ஜெயங்கொண்டம் வாரச்சந்தையில் அதிகாரிகள் ஆய்வு மாம்பழங்கள், பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்


ஜெயங்கொண்டம் வாரச்சந்தையில் அதிகாரிகள் ஆய்வு மாம்பழங்கள், பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 20 May 2019 10:15 PM GMT (Updated: 20 May 2019 8:15 PM GMT)

ஜெயங்கொண்டம் வாரச்சந்தையில் அதிகாரிகள் ஆய்வு மாம்பழங்கள், பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்.

ஜெயங்கொண்டம்,

ஜெயங்கொண்டம் வாரச்சந்தை திங்கட்கிழமை தோறும் நடைபெறும். இந்த வாரச்சந்தையில் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் விளைந்த காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஜெயங்கொண்டம் வாரச்சந்தையில் கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது என்று உணவு பாதுகாப்பு துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து நேற்று நடைபெற்ற வாரச்சந்தையில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சசிக்குமார் தலைமையில், ஜெயங்கொண்டம் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன், தூய்மை இந்தியா திட்ட பரப்புரை மேற்பார்வையாளர் இந்துமதி உள்ளிட்ட குழுவினர் திடீரென கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது சில கடைகளில் கார்பைடு கல் வைத்து பழுக்க வைத்த மாம் பழங்கள் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டு அந்த பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அந்த கடைகளுக்கு அபராதம் விதித்து, இனிமேல் கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை விற்பனை செய்யக்கூடாது என்று எச்சரித்து சென்றனர். மேலும் ஒரு சில கடைகளில் இருந்த பிளாஸ்டிக் கவர்களையும் பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story