பாவூர்சத்திரம் அருகே விஷம் குடித்த நர்சு பரிதாப சாவு


பாவூர்சத்திரம் அருகே விஷம் குடித்த நர்சு பரிதாப சாவு
x
தினத்தந்தி 21 May 2019 3:30 AM IST (Updated: 21 May 2019 2:00 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரம் அருகே தந்தை கண்டித்ததால் விஷம் குடித்த நர்சு பரிதாபமாக இறந்தார்.

பாவூர்சத்திரம்,

நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள வேட்டைக்காரன்குளத்தைச் சேர்ந்தவர் பூதப்பாண்டி. இவருடைய மகள் சங்கரகோமதி (வயது 21). இவர் பாவூர்சத்திரம் அருகே ஆவுடையானூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி குடும்ப பிரச்சினை காரணமாக பூதப்பாண்டிக்கும், சங்கரகோமதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த பூதப்பாண்டி, சங்கரகோமதியை கண்டித்ததாக தெரிகிறது. இதில் மனமுடைந்த சங்கரகோமதி வேலைக்கு சென்றார்.

பின்னர் அவர், வேலை முடிந்ததும் வீட்டிற்கு செல்வதற்காக ஆவுடையானூர் பஸ் நிறுத்தத்திற்கு சென்றார். அங்கு அவர், விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சங்கரகோமதி நேற்று அதிகாலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story