தலைஞாயிறு பகுதிகளில் 25 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்


தலைஞாயிறு பகுதிகளில் 25 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 22 May 2019 4:15 AM IST (Updated: 22 May 2019 12:32 AM IST)
t-max-icont-min-icon

தலைஞாயிறு பகுதிகளில் 25 கிலோ பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வாய்மேடு,

சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்தது.

இந்த நிலையில் நாகை மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மளிகை கடை, ஜவுளிக்கடை, ஓட்டல்கள் மற்றும் பல்பொருள் அங்காடி உள்ளிட்ட கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என பேரூராட்சி செயல் அலுவலர் ரஞ்சித் தலைமையில், ஊழியர்கள் ஆய்வு செய்தனர்.

பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

இந்த ஆய்வின் போது 100-க்கும் மேற்பட்ட கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் 25 கிலோ பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கடை உரிமையாளருக்கு தலா ரூ.2 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த ஆய்வின் போது துப்புரவு மேற்பார்வையாளர் அகிலா, வரிதண்டலர் குழந்தைராஜ், ஊழியர்கள் ஜெயச்சந்திரன், அன்பு உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story