கொலை வழக்கில் கைதானவர் குண்டர் சட்டத்தில் அடைப்பு


கொலை வழக்கில் கைதானவர் குண்டர் சட்டத்தில் அடைப்பு
x
தினத்தந்தி 21 May 2019 10:30 PM GMT (Updated: 21 May 2019 8:47 PM GMT)

மணக்குடியை சேர்ந்த வின்சென்ட் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

மேலகிருஷ்ணன்புதூர்,

சுசீந்திரம் அருகே கீழமணக்குடியை சேர்ந்தவர் கிதியோன் ராஜ் (வயது 23). இவர் கடந்த மாதம் மணக்குடியை சேர்ந்த வின்சென்ட் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கிதியோன் ராஜ் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இதனால், இவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், மாவட்ட கலெக்டரிடம் பரிந்துரை செய்தார். இதனைத் தொடர்ந்து கலெக்டர் பிரசாந்த் வடநேரே, கிதியோன் ராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி சுசீந்திரம் போலீசார், அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story