தொழிலாளியை தாக்கிய தந்தை-மகனுக்கு 2 ஆண்டு சிறை


தொழிலாளியை தாக்கிய தந்தை-மகனுக்கு 2 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 22 May 2019 10:15 PM GMT (Updated: 22 May 2019 7:46 PM GMT)

தொழிலாளியை தாக்கிய வழக்கில் தந்தை, மகனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி புதுவை கோர்ட்டு உத்தரவிட்டது.

புதுச்சேரி, 

புதுவையை அடுத்த கோட்டகுப்பத்தை சேர்ந்தவர் சக்திவேல் என்ற வேல். இவர் புதுவை கொசக்கடை வீதியில் உள்ள ரைஸ் மில்லில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.

இவரை, கடந்த 2016-ம் ஆண்டு காமராஜ் நகரை சேர்ந்த காமராஜ் (வயது 50), அவரது மகன் விஜயகாந்த் (24) ஆகியோர் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து புதுவை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தநிலையில் தலைமை குற்றவியல் நீதிபதி கிருஷ்ணசாமி தீர்ப்பு வழங்கினார். அவர், குற்றம்சாட்டப்பட்ட காமராஜ், விஜயகாந்த் ஆகியோருக்கு 2 ஆண்டு சிறைதண்டனையும், தலா ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பிரவீன்குமார் ஆஜரானார்.

Next Story