மாவட்ட செய்திகள்

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி + "||" + Tribute to those killed in gunfire

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலக்காவட்டாங்குறிச்சி கிராமத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கீழப்பழுவூர்,

கடந்த ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலக்காவட்டாங்குறிச்சி கிராமத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 13 என்ற எண்ணை ஓவியமாக வரைந்து அப்படத்திற்கு மலர் தூவி மவுன அஞ்சலி செலுத்தினர். இதில் அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப்பிரிவு மாநில தலைவர் தங்க சண்முகசுந்தரம், அரியலூர் மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் மணியன் உள்ளிட்ட கிராம மக்கள், விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.தொடர்புடைய செய்திகள்

1. மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் 17 பேர் பலியான நினைவு தினம்: நெல்லை தாமிரபரணி ஆற்றில் அரசியல் கட்சியினர் அஞ்சலி
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 17 பேர் பலியான நினைவு தினத்தையொட்டி நேற்று தாமிரபரணி ஆற்றில் அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினார்கள்.
2. யோகி பாபு ஜோடியாக அஞ்சலி!
அஞ்சலி, ஒரு புதிய படத்தில் கூடைப்பந்து வீராங்கனையாக நடித்து இருக்கிறார்.
3. திருவையாறு தியாகராஜர் சமாதியில் துபாய் வாழ் இந்திய மாணவர்கள் இசை அஞ்சலி
திருவையாறு தியாகராஜர் சமாதியில் துபாய் வாழ் இந்திய மாணவர்கள் இசை அஞ்சலி செலுத்தினர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை