நெல்லை மாவட்டத்தில் தி.மு.க. கூட்டணியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்


நெல்லை மாவட்டத்தில் தி.மு.க. கூட்டணியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
x
தினத்தந்தி 23 May 2019 10:45 PM GMT (Updated: 23 May 2019 10:13 PM GMT)

நெல்லை மாவட்டத்தில், நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து, கூட்டணி கட்சியினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

நெல்லை,

நெல்லை

நாடாளுமன்ற தேர்தலில் நெல்லை உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளிலும், சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதனை முன்னிட்டு, நெல்லை சந்திப்பு கைலாசபுரத்தில் தி.மு.க.வினர் மாநில நெசவாளர் அணி செயலாளர் பெருமாள் தலைமையில், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

அம்பை

இதேபோன்று அம்பை பஜாரில் நகர தி.மு.க. செயலாளர் பிரபாகரன் தலைமையில் பட்டாசு வெடித்து அக்கட்சியினர் கொண்டாடினர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நகர அவைத்தலைவர் ஆறுமுகம், துணை செயலாளர்கள், வட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

தென்காசி

தென்காசி காந்தி சிலை முன்பு நகர தி.மு.க. தலைவர் சாதிக் தலைமையில் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தி.மு.க.வினர் வெற்றியை கொண்டாடினர். இதில் மேற்கு மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் கோமதிநாயகம், ம.தி.மு.க. நகர செயலாளர் வெங்கடேஸ்வரன் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

கலிங்கப்பட்டி

கலிங்கப்பட்டியில் குருவிகுளம் ஒன்றிய தி.மு.க.கூட்டணி சார்பில் ம.தி.மு.க. நிர்வாகி ஜோதிராஜ் தலைமையில் தி.மு.க. ஊராட்சி செயலாளர் புஷ்பராஜ், கிளை செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட தி.மு.க.வினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் வெற்றியை கொண்டாடினர்.


Next Story