மாவட்ட செய்திகள்

மீன்சுருட்டி போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட முயன்ற பா.ம.க.வினரால் பரபரப்பு + "||" + Fishermurthi police station was previously fascinated by the PMK who tried to get off the road

மீன்சுருட்டி போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட முயன்ற பா.ம.க.வினரால் பரபரப்பு

மீன்சுருட்டி போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட முயன்ற பா.ம.க.வினரால் பரபரப்பு
மீன்சுருட்டி போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட முயன்ற பா.ம.க.வினரால் பரபரப்பு ஏற்பட்டது.
மீன்சுருட்டி,

சமூக வலைதளங்களில் ஒன்றான டிக்-டாக்கில் ஒரு சமுதாயத்தினரை இழிவாக பேசி மிரட்டும் வகையில் அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள முத்துசேர்வாமடம் கிராமத்தில் வசிக்கும் மாற்று சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி போலீஸ் நிலையம் முன்பு உள்ள சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் 100-க்கும் மேற்பட்ட பா.ம.க.வினர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.


குண்டர் சட்டம் பாயும்

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு கென்னடி தலைமையிலான போலீசார், உடனே அங்கு சென்று போராட்டம் நடத்த முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் டிக்-டாக்கில் அவதூறு பதிவு செய்தவரை கைது செய்வோம் என போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சமூக வலைதளங்களில் ஜாதி கலவரத்தை உண்டாக்கும் வகையில் அவதூறு பரப்பினால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் எச்சரித்துள்ளார்.