காடம்பாடியில் கோவில் உண்டியல் திருட்டு 4-வது முறையாக மர்ம நபர்கள் கைவரிசை


காடம்பாடியில் கோவில் உண்டியல் திருட்டு 4-வது முறையாக மர்ம நபர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 26 May 2019 3:45 AM IST (Updated: 26 May 2019 1:43 AM IST)
t-max-icont-min-icon

நாகை காடம்பாடியில் கோவில் உண்டியல் திருட்டு போனது. இந்த கோவிலில் 4-வது முறையாக மர்ம நபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.

நாகப்பட்டினம்,

நாகை காடம்பாடி சொக்கநாதர்கோவில் தெருவில் வீரசொக்கநாதர் விநாயகர் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு பூஜைகளை முடித்து விட்டு வழக்கம்போல் கோவிலை பூசாரி பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.

இந்த நிலையில் நேற்று காலை பூசாரி கோவிலுக்கு வந்தபோது உண்டியலை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் கோவில் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் உண்டியலை திருடி சென்றது தெரிய வந்தது.

4-வது முறையாக...

மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் உண்டியலை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த கோவிலில் இதுபோன்று 3 முறை உண்டியல் உடைக்கப்பட்டு பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். தற்போது 4-வது முறையாக உண்டியலை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story