அரிமளத்தில் மாட்டு வண்டி பந்தயம்


அரிமளத்தில் மாட்டு வண்டி பந்தயம்
x
தினத்தந்தி 26 May 2019 10:45 PM GMT (Updated: 26 May 2019 8:17 PM GMT)

அரிமளத்தில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

அரிமளம்,

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளத்தில் சேத்துமேல் செல்லய்யனார் கோவில் குதிரை எடுப்பு திருவிழாவை முன்னிட்டு 15-ம் ஆண்டு் மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் அரிமளம்-ராயவரம் சாலையில் நடைபெற்றது. பெரிய மாடு, நடு மாடு, சின்ன மாடு என 3 பிரிவாக போட்டி நடைபெற்றது. பெரியமாடு போக வர 8 மைல் தூரமும், நடுமாடு போக வர 6 மைல் தூரமும், சின்ன மாடு போக வர 5 மைல் தூரம் என போட்டி தூரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

பெரிய மாடு பிரிவில் 12 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசை கே.புதுப்பட்டி அம்பாள், இரண்டாம் பரிசை தினையகுடி ஆர்.கே.சிவா பெரியஅய்யனார், மூன்றாம் பரிசை சிங்கவனம் ஜமீன்ராஜா ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் பெற்றன.

பரிசுகள்

சிறிய மாடு பிரிவில் 19 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசை எட்டியத்தளி அருகேயுள்ள மாங்குடி வீரபெருமாள், இரண்டாம் பரிசை சிங்கவனம் ஜமீன்ராஜா, மூன்றாம் பரிசை ராஜா மோட்டார்ஸ் அடைக்கன் நினைவு குழு ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் பெற்றன.

சின்ன மாடு பிரிவில் 30 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இப்போட்டி 2 பிரிவாக நடத்தப்பட்டன. இதில் முதல் பரிசினை அரிமளம் கரையப்பட்டி துரைராஜ், கே.புதுப்பட்டி அம்பாள் ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் பெற்றன. இரண்டாம் பரிசுகளை சொக்கலிங்கபுதூர் ராமன், தஞ்சாவூர் மாவட்டம் அரசங்குடி மதி ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் பெற்றன. மூன்றாம் பரிசுகளை தஞ்சாவூர் அம்மன்பேட்டை மனோகரன் சுந்தர், ந.கொத்தமங்கலம் வீரகேசவன் ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் பெற்றன. வெற்றிபெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கபரிசுகள், குத்து விளக்கு மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. போட்டிக்கான ஏற்பாடுகளை அரிமளம் ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். 

Next Story