ஈரோட்டில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளி கைது


ஈரோட்டில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளி கைது
x
தினத்தந்தி 28 May 2019 4:15 AM IST (Updated: 28 May 2019 12:27 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு,

ஈரோட்டை சேர்ந்த 12 வயது சிறுமியின் பெற்றோர் நேற்று முன்தினம் வேலைக்கு சென்றிருந்தனர். இதனால் சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது மர்மநபர் ஒருவர் வீட்டுக்குள் நுழைந்தார்.

அவர் அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி கூச்சலிட்டார். இதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் சிறுமியின் வீட்டுக்கு வரத்தொடங்கினார்கள். இதனால் அந்த நபர் வீட்டில் இருந்து தப்பி சென்றுவிட்டார்.

இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவர் வீரப்பன்சத்திரம் 16 ரோடு ராஜாஜி வீதியை சேர்ந்த மூர்த்தி (வயது 44) என்பதும், தறிப்பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மூர்த்தியின் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை நேற்று கைது செய்தனர்.


Next Story