ஜெயங்கொண்டம் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்
ஜெயங்கொண்டம் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள மணக்கரை கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக நகராட்சி சார்பில் அப்பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு, அதன் அருகே மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து, அதில் நீர் ஏற்றப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆழ்குழாய் கிணற்றில் அமைக்கப்பட்டு உள்ள மின்மோட்டார் பழுதடைந்தது. இதனால் அப்பகுதியில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டு அப்பகுதி மக்கள் குடிநீருக்காக அலைந்து திரிந்து வந்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தனர். ஆனால் இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் அருகிலுள்ள மாண்ட்ரேரி கிராமத்திற்கு சென்று தண்ணீர் எடுத்து வந்தனர். அப்போது எங்களுக்கே தண்ணீர் பற்றாக்குறை இருக்கிறது என்று அந்த கிராம மக்கள் தண்ணீர் தர மறுத்துள்ளனர். இந்த நிலையில் தங்களுக்கு பெரிதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதாக கூறி ஆத்திரமடைந்த மணக்கரை கிராம மக்கள் நேற்று குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
அப்போது நகராட்சி ஊழியர்கள் விரைவில் குடிநீர் வினியோகம் செய்கிறோம் என்று கூறி அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இருப்பினும் நகராட்சி மீது நம்பிக்கை இல்லாத மணக்கரை பகுதி மக்கள் ஜெயங்கொண்டம் 4 ரோடு முன்பாக காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் கூறுகையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இதுகுறித்து எடுத்துரைத்து மணக்கரை பகுதியில் குடிநீர் வினியோகம் செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்கிறோம். மேலும் பழுதடைந்த மின்மோட்டார் சரிசெய்யப்படும் என்று கூறினர். இதனை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் ஜெயங்கொண்டம் 4 ரோடு சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story