திருச்சி கருமண்டபம் இளங்காட்டு மாரியம்மன் கோவில் திருவிழா பால்குடம், தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்


திருச்சி கருமண்டபம் இளங்காட்டு மாரியம்மன் கோவில் திருவிழா பால்குடம், தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
x
தினத்தந்தி 28 May 2019 4:00 AM IST (Updated: 28 May 2019 2:20 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி கருமண்டபம் இளங்காட்டு மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பால் குடம், தீ மிதித்து பக்தர் கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருச்சி,

திருச்சி கருமண்டபத்தில் புகழ்பெற்ற இளங்காட்டு மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 70-ம் ஆண்டு வைகாசி திருவிழா மற்றும் 28-ம் ஆண்டு பூச்சொரிதல் விழா நடைபெற்று வருகிறது. விழா கடந்த 19-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குடம் எடுத்தல் மற்றும் தீ மிதித்தல் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. கோரையாற்றில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி, மயில் காவடி எடுத்தபடியும், அலகு குத்தியபடியும் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். அதனை தொடர்ந்து பக்தர்கள் தீ மிதித்து அம்மனுக்கு தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். பின்னர் அபிஷேகமும், ஒண்டிகருப்புசாமி காவு பூஜையும், இரவில் கிராமிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இன்று (செவ்வாய்க்கிழமை) அம்மன் வீதி உலாவும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறுகிறது.

பெரிய கருப்பூர்

இதேபோல ஜீயபுரம் அருகே உள்ள பெரிய கருப்பூர் மாரி யம்மன் கோவில் திருவிழாவை யொட்டி பக்தர்கள் அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். 
1 More update

Next Story