வார்டு மறுவரையறை குறித்து அனைத்து கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம்


வார்டு மறுவரையறை குறித்து அனைத்து கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 28 May 2019 4:52 AM IST (Updated: 28 May 2019 4:52 AM IST)
t-max-icont-min-icon

வார்டு மறுவரையறை குறித்து அனைத்து கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருப்பூர்,

திருப்பூர் மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் மேயர் தேர்தலுக்கான வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் மீதான வார்டு மறு வரையறை குறித்த அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநகராட்சி கமிஷனர் சிவகுமார் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் 1400 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி உள்ளது. சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்கள், வார்டு வாரியாக பிரித்து அவர்கள் வாக்களிக்க வேண்டிய வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகள் குறித்து கருத்துகள் இருந்தால் அதை அரசியல் கட்சியினர் எழுத்து மூலமாகவோ தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து, கூட்டத்தில் கலந்து கொண்ட அரசியல் பிரதிநிதிகள் தங்களின் பல்வேறு கோரிக்கைகளை எழுத்து மூலமாக தெரிவித்தனர். கூட்டத்தில் மாநகராட்சி உதவி கமிஷனர்கள் முகமது சபியுல்லா, செல்வநாயகம் மற்றும் அனைத்து கட்சி பிரதிநிதிகள், மாநகராட்சி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story