வீட்டில் கற்பூரம் ஏற்றி பூஜை செய்தபோது தீவிபத்து: மின்வாரிய ஊழியர் உடல்கருகி சாவு


வீட்டில் கற்பூரம் ஏற்றி பூஜை செய்தபோது தீவிபத்து: மின்வாரிய ஊழியர் உடல்கருகி சாவு
x
தினத்தந்தி 29 May 2019 3:45 AM IST (Updated: 28 May 2019 9:11 PM IST)
t-max-icont-min-icon

வீட்டில் கற்பூரம் ஏற்றி பூஜை செய்த போது தீவிபத்து ஏற்பட்டு மின்வாரிய ஊழியர் உடல்கருகி இறந்தார்.

ராஜபாளையம்,

ராஜபாளையம் ஆண்டத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது70). ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் தற்போது சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சில வாரங்களுக்கு முன்பு ராஜபாளையத்திற்கு

வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் பூஜைஅறையில் கற்பூரம் ஏற்றி சாமி கும்பிட்டுக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அவரது ஆடையில் தீப்பற்றியது. உடல் முழுவதும் தீக்காயங்கள் ஏற்பட்டநிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் லிங்குசாமி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.


Next Story