வாலிபர் கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது
வாலிபர் கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த பாணாதுறை பத்துக்கட்டுத்தெருவை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (வயது 53). இவருடைய மகன் அருண் (22). சிவசுப்பிரமணியன் அந்த பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். சிவசுப்பிரமணியன் அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (49) என்பவரிடம் ரூ.3 லட்சம் கடன் வாங்கினார். இதற்கு மாதந்தோறும் வட்டியை கொடுத்து வந்துள்ளார். இந்தநிலையில் கடன் கொடுத்தவர்கள் வீட்டிற்கு வந்து பணம் கேட்டதால் மனமுடைந்த சிவசுப்பிரமணியன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை அவருடைய குடும்பத்தினர் காப்பாற்றி மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். சிகிச்சை முடிந்து சிவசுப்பிரமணியன் வீடு திரும்பினார். இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் மீண்டும் சிவசுப்பிரமணியனை தேடி வந்தனர். அப்போது மளிகை கடையில் அருண் இருந்துள்ளார். அவரிடம் தகராறு செய்தவர்கள் அவரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர்.
குண்டர் சட்டம்
இது தொடர்பாக கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமார், அவருடைய நண்பர்கள் வெங்கடேசன் (34), விளந்தகண்டனம் சந்திரசேகரன் (43), ஜீவகருணா என்ற முகமதுசமீகர் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
இந்த நிலையில் இவர்கள் 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், கலெக்டர் அண்ணாதுரைக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் கும்பகோணம் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாதேவன், குண்டர் சட்டத்தில் செந்தில்குமார், வெங்கடேசன், சந்திரசேகரன், முகமதுசமீர் ஆகிய 4 பேரையும் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தார்.

Related Tags :
Next Story