தென்பெண்ணை ஆறு ஆக்கிரமிப்பை கண்டித்து பொதுப்பணித்துறை அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
கிருஷ்ணகிரி அணை அருகே தென்பெண்ணை ஆற்றின் ஒரு பகுதியை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதை கண்டித்து கிராம மக்கள் அணை பொதுப் பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி அணை அருகே உள்ள கால்வேஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் எலுவன்கொட்டாய். தென்பெண்ணை ஆற்றை ஒட்டி அமைந்துள்ள இந்த கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று காலை இந்த கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கிருஷ்ணகிரி அணையிலுள்ள பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அலுவலகத்தில் இருந்த பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி அணையில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் நாராயணன் கொட்டாய் கிராமம் அருகில் தென்பெண்ணை ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் ஒரு பகுதியை கத்தேரி மேல்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த தனி நபர் ஒருவர் ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். நேற்று முன்தினம் இரவு ஆற்றில் பொக்லைன் மூலம் பெரிய அளவிலான பள்ளங்கள் தோண்டப்பட்டது. ஆற்றின் ஒரு பகுதி முழுவதும் மணல் கொட்டப்பட்டு, மேடாக மாற்றினார்கள்.
இதைத் தொடர்ந்து 150-க்கும் மேற்பட்ட தென்னங்கன்றுகளை நடவு செய்தனர்.
இதனை கிராம மக்கள் தடுத்து நிறுத்தி பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்து வைத்துள்ளனர். தென்பெண்ணை ஆற்று பகுதியை ஆக்கிரமிக்க முயற்சி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கிருஷ்ணகிரி அணையின் உதவி பொறியாளர் சையத் கூறியதாவது:- புகார் மனு தொடர்பாக நடவடிக்கை எடுக்க மாவட்ட வருவாய் அலுவலருக்கும், காவல்துறைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story