கோடை காலத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை கலெக்டர் தகவல்
கோடை காலத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
கீழ்வேளூர்,
நாகை அருகே கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியம் அணக்குடி கிராமத்தில் உபரி நிதியின் கீழ் ரூ.4.17 லட்சம் மதிப்பீட்டில் கீழத்தெரு முதல் மாரியம்மன் கோவில் தெரு வரை 2 ஆயிரத்து 100 மீட்டர் நீளத்திற்கு குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சாட்டியக்குடி மற்றும் வெண்மணி கிராமத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கீழ் குடிநீர் வழங்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளையும், வடக்குப்பனையூர் கிராமத்தில் பொது நிதியின் கீழ் ரூ.5.62 லட்சம் மதிப்பீட்டில் 2 ஆயிரத்து 880 மீட்டர் நீளத்திற்கு குடிநீர் குழாய் விரிவாக்க பணிகளும், திருக்கண்ணங்குடி கிராமத்தில் பொது நிதியின் கீழ் ரூ.1.86 லட்சம் மதிப்பீட்டில் போர்வெல் மற்றும் மோட்டார் அறை அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கோடை காலத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. எந்தெந்த பகுதிகளில் இருந்து புகார்கள் பெறப்படுகிறதோ, அந்த பகுதிகளில் ஏற்படும் குறைபாடுகளை உடனடியாக சரி செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். பயன்படுத்தும் குடிநீரை மோட்டார் மூலம் எடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர் குழாய்களில் பாதிப்பு ஏற்படும் இடங்களில் டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கீழ்வேளூர் பகுதிகளில் உள்ள குடிநீர் வழங்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், நீரேற்ற நிலையங்கள், மோட்டார் பம்புகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்வது தொடர்பான பணிகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. பழுதடைந்த குடிநீர் குழாய்களை உடனடியாக சரி செய்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமலைக்கண்ணன், அருள்மொழி, செயற்பொறியாளர் வேலு, தாசில்தார் கபிலன், ஒன்றிய பொறியாளர் வெற்றிவேல் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story