தாம்பரத்தில் இருந்து திருவாரூர் வழியாக காரைக்குடிக்கு அந்தியோதயா ரெயில் இயக்க வேண்டும்


தாம்பரத்தில் இருந்து திருவாரூர் வழியாக காரைக்குடிக்கு அந்தியோதயா ரெயில் இயக்க வேண்டும்
x
தினத்தந்தி 30 May 2019 10:15 PM GMT (Updated: 30 May 2019 6:54 PM GMT)

தாம்பரத்தில் இருந்து திருவாரூர் வழியாக காரைக்குடிக்கு அந்தியோதயா ரெயிலை இயக்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட ரெயில் உபயோகிப்பாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

திருவாரூர்,

திருவாரூர்-காரைக்குடி அகல ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவடைந்தும் ரெயில் சேவை தொடங்கப்படாமல் இருந்தது. எனவே திருவாரூர்-காரைக்குடி மார்க்கத்தில் ரெயில் சேவையை தொடங்க வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ரெயில் உபயோகிப்பாளர் சங்கம், நுகர்வோர் பாதுகாப்பு மையம் உள்பட பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வந்தன. இந்த நிலையில் நாளை (சனிக்கிழமை) முதல் திருவாரூர்-காரைக்குடி மார்க்கத்தில் ரெயில் சேவையை தொடங்க உள்ளதாக தென்னக ரெயில்வே அறிவித்து உள்ளது.

இந்த ரெயில் சேவை திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை நடைபெறும். ஞாயிற்றுக் கிழமையில் திருவாரூர்-காரைக்குடி மார்க்கத்தில் ரெயில் சேவை கிடையாது. அன்றைய தினத்தில் திருவாரூரில் இருந்து திருச்சிக்கு பராமரிப்பு பணிகளுக்கு செல்லும் இந்த ரெயில், பயணிகள் ரெயிலாக செல்கிறது. திருவாரூரில் இருந்து காலை 4.10 மணிக்கு புறப்படும் ரெயில் 6.50 மணிக்கு திருச்சி சென்றடைகிறது. பின்னர் இரவு 7.45 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு இரவு 10.45 மணிக்கு திருவாரூர் வந்தடையும். இந்த ரெயில் சேவை ஆகஸ்டு 30-ந் தேதி வரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தியோதயா ரெயில்

இதுகுறித்து திருவாரூர் மாவட்ட ரெயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர் கூறுகையில், திருவாரூர்-காரைக்குடி மார்க்கத்தில் ஏற்கெனவே இயங்கிக்கொண்டிருந்த அனைத்து ரெயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும். தாம்பரத்தில் இருந்து திருவாரூர் வழியாக காரைக்குடிக்கு அந்தியோதயா ரெயில் இயக்க வேண்டும். தினசரி அதிகாலையில் காரைக்குடி- சென்னை மார்க்கத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story