இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு இந்து மக்கள் கட்சியினர் காவி வேட்டி அனுப்பும் போராட்டம்
கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சியினர் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு கண்டனம் தெரிவித்து காவி வேட்டி அனுப்பும் போராட்டத்தை நடத்தினர்.
கும்பகோணம்,
சென்னையில் கடந்த 21-ந்தேதி நடைபெற்ற ஒரு திரைப்பட நிகழ்ச்சியில் நடிகர் விஜய்யின் தந்தையும், தமிழ் திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் மக்கள் இனி காவி வேட்டி கட்டிக்கொண்டு அலைய வேண்டும் என்று பேசினார்.
அவரது பேச்சுக்கு பல்வேறு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. இந்தநிலையில் கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சியினர் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் பேச்சை கண்டித்து கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன்பு போராட்டம் நடத்தினர்.
காவி வேட்டி அனுப்பினர்
அதை தொடர்ந்து எஸ்.ஏ.சந்திரசேகருக்கு காவி வேட்டி அனுப்பி வைத்தனர். அப்போது கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
நிகழ்ச்சிக்கு மாநில செயலாளர் பாலா தலைமை தாங்கினார். இதில் மாவட்ட மாணவரணி செயலாளர் லோகேஷ், மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் ரவி, வி.எச்.பி. நகர தலைவர் கண்ணன், தஞ்சை மாவட்ட மாணவரணி தலைவர் பரத், பாபநாசம் ஒன்றிய மாணவர் அணி பொறுப்பாளர் அரவிந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story