சொத்து தகராறில் முன்விரோதம்: தாயை அரிவாளால் வெட்டிய தொழிலாளிக்கு 5 ஆண்டு ஜெயில் கோர்ட்டு தீர்ப்பு
மணவாளக்குறிச்சி அருகே தாயை அரிவாளால் வெட்டிய தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து இரணியல் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
அழகியமண்டபம்,
மணவாளக்குறிச்சி அருகே அம்மாண்டிவிளை, திவண்டகோட்டையை சேர்ந்த வேலாயுத பெருமாள் மனைவி பேபி (வயது 64). இவர்களது மகன் மனோகரன் (43), தொழிலாளி. சொத்து பிரச்சினை தொடர்பாக பேபிக்கும், அவருடைய மகனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
கடந்த 20.7.2001 அன்று மனோகரனின் மனைவி தங்கம் குப்பைகளை பெருக்கி பேபியின் வீட்டின் முன்பு வைத்துள்ளார். இதை பேபி தட்டிக்கேட்டார். உடனே, மனைவிக்கு ஆதரவாக மனோகரன் தாயிடம் தகராறு செய்தார். அப்போது ஆத்திரமடைந்த மனோகரன் அரிவாளால் பேபியை வெட்டினார். அதை தடுக்க சென்ற தம்பி பிரபாகரன் மீதும் தாக்கினார்.
இதுகுறித்து மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த வழக்கு இரணியல் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி முத்து மகாராஜன், தாயை அரிவாளால் வெட்டிய மனோகரனுக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Related Tags :
Next Story