ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி வயலுக்குள் இறங்கி விவசாயிகள் போராட்டம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி வயலுக்குள் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மன்னார்குடி,
காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயத்தை அழித்திடும் வகையில் மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக நேற்று மன்னார்குடி அருகே 54.நெம்மேலியில் மன்னார்குடி ஒன்றிய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் பருத்தி வயலுக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வேதாந்தா, ஓ.என்.ஜி.சி., பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஹைட்ரோ கார்பன் எடுக்க வழங்கியுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசு பொதுமக்கள், விவசாயிகளுக்கு எதிரான போக்கை கைவிட வேண்டும். மக்களுக்கு எதிரான மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.
போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர் வீரமணி உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல நான்காம்சேத்தி, சேரங்குளம் உள்ளிட்ட இடங்களிலும் விவசாயிகள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மன்னார்குடி கீழப்பாலம் அருகே உள்ள அய்யனார் குளத்திற்குள் இறங்கி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் விவசாய சங்க நகர செயலாளர் கலியபெருமாள், தலைவர் ராஜ்குமார், விவசாய தொழிலாளர் சங்க நகர தலைவர் செல்வராஜ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் கலைச்செல்வன், மாணவர் மன்ற மாநில குழு உறுப்பினர்கள் அஸ்வினி, நந்தினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Related Tags :
Next Story