துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு காதல் பிரச்சினையா? போலீசார் விசாரணை
துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காதல் பிரச்சினை காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்மலைப்பட்டி,
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பூலாங்குடி காலனி முல்லைநகரை சேர்ந்தவர் காமராஜ். இவர், திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் சதீஷ் (வயது 23). டிப்ளமோ படித்து முடித்து விட்டு வேலை தேடி வருகிறார். இவர், வேறு சமூகத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்தார். இதற்கு அந்த பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால், அந்த பெண்ணை அழைத்து வந்து தந்தை காமராஜ் வீட்டில் தங்க வைத்தார். இருவருக்கும் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்று அதிகாலை காமராஜ் வீட்டுக்கு வந்த மர்ம நபர்கள் சிலர் வீட்டின் மீது 2 பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் வீட்டில் இருந்த சில பொருட்கள் தீயில் கருகின.
இச்சம்பவம் குறித்து நவல்பட்டு போலீசில் சதீஷ் புகார் கொடுத்தார். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். காதல் பிரச்சினையா? அல்லது முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்ததா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தப்பி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story