மணப்பாறை அருகே குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி 2 இடங்களில் சாலை மறியல்
குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி மணப்பாறை அருகே 2 இடங்களில் சாலை மறியலில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.
மணப்பாறை,
மணப்பாறை நகராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது. நொச்சிமேடு பகுதியில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம், குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததால் அப்போது மறியல் கைவிடப்பட்டது.
ஆனால், இதுவரை நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலை திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நொச்சிமேடு அருகே மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப் படும் என்று கூறியதை அடுத்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
இதேபோல, மருங்காபுரி ஒன்றியத்திற்குட்பட்ட தொட்டியபட்டி ஊராட்சி மேடுகாட்டுப்பட்டி மற்றும் லஞ்சமேடு கைகாட்டி பகுதியில் குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது. இந்தநிலையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி, நேற்று காலை மணப்பாறை-கோவில்பட்டி சாலையில் அப்பகுதி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டனர்.

Related Tags :
Next Story