திண்டுக்கல்- விராலிப்பட்டி இடையே அரசு பஸ்சை முறையாக இயக்க வேண்டும்; கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
திண்டுக்கல்-விராலிப்பட்டி இடையே அரசு பஸ்சை முறையாக இயக்க வேண்டும் என பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் வேலு, திட்ட இயக்குனர் கவிதா உள்பட பலர் முன்னிலை வகித்தனர். முன்னதாக வடமதுரை ஊராட்சி ஒன்றியம் குளத்தூரை அடுத்த விராலிப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர். அப்போது திண்டுக்கல்-விராலிப்பட்டி இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை ஒரு அரசு பஸ் தினசரி 10 முறை இயக்கப்பட்டது. இதன் மூலம் செட்டிநாயக்கன்பட்டி, கள்ளிப்பட்டி, காப்பிளியப்பட்டி, முனியபிள்ளைப்பட்டி, விராலிப்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் பயனடைந்து வந்தனர். ஆனால் தற்போது அந்த பஸ் ஒரு நாளைக்கு 6 முறை மட்டுமே இயக்கப்படுகிறது. சில நாட்களில் ஒரு முறை மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் எங்கள் பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட கலெக்டர் இதில் தலையிட்டு அரசு பஸ்சை முறையாக இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். அத்துடன் கூடுதல் பஸ்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். இதைப்பார்த்த கலெக்டர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்து கலெக்டரிடம் மனு கொடுக்கும்படி கூறி அனுப்பி வைத்தனர்.
அதேபோல், பழனியை அடுத்த கணக்கன்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் தமிழ்ப்புலிகள் கட்சி நிர்வாகிகள் தலைமையில் கலெக்டர் அலுவலகத்துக்கு கோரிக்கைகளை வலியுறுத்தியபடி கோஷமிட்டபடியே வந்தனர். அவர்களை நிறுத்தி போலீசார் விசாரித்தனர். அப்போது தங்கள் பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் நிலம் வழங்கப்பட்டது.
அதில் நாங்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறோம். இந்த நிலையில் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தின் ஒரு பகுதியில் சிலருக்கு முறைகேடாக பட்டா வழங்கப்பட்டுள்ளது. பட்டா வழங்கிய அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்களுக்கு அளந்து கொடுப்பதற்காக வந்தனர். அவர்களை நாங்கள் தடுத்து நிறுத்தினோம். பின்னர் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், அளவீட்டு பணியை தடுத்தால் உங்களை போலீசார் மூலம் சிறையில் அடைப்போம் என மிரட்டுகின்றனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட வேண்டும் என்று போலீசாரிடம் பொதுமக்கள் தெரிவித்தனர். பின்னர் அவர்களில் சிலரை மட்டும் கலெக்டரிடம் சென்று மனு அளிக்கும்படி போலீசார் கூறினர். அதையடுத்து பொதுமக்கள் சார்பில் சிலர் சென்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
அவர்களை தொடர்ந்து திண்டுக்கல் கேத்தம்பட்டி, கோம்பையூர், கே.புதூர், குருநாதநாயக்கனூர், ஜி.நடுப்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 150 நாட்கள் வேலை வழங்க வேண்டும். அதற்கான சம்பளத்தை முழுமையாக வழங்க வேண்டும் என கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அதையடுத்து கொடைக்கானல் கூக்கால் கிராமத்தை சேர்ந்த தனசுந்தரம் என்பவர், தனது நிலத்தை சிலர் ஆக்கிரமித்ததுடன் தான் சாகுபடி செய்த பயிர்களையும் அழித்ததாகவும் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் புகார் மனு அளித்தார். நேற்று நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மொத்தம் 423 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து 16 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

Related Tags :
Next Story