திருவெண்காடு பகுதியில் உள்ள கடைகளில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்
திருவெண்காடு பகுதியில் உள்ள கடைகளில் சுகாதார அலுவலர் ராஜ்மோகன் நடவடிக்கையின் பேரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவெண்காடு,
நாகை மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சண்முகசுந்தரம் உத்தரவின்பேரில் சீர்காழி வட்டார சுகாதார அலுவலர் டாக்டர் ராஜ்மோகன் மேற்பார்வையில் திருவெண்காடு பகுதியை சேர்ந்த மேலையூர், செம்பதனிருப்பு, காத்திருப்பு, ராதாநல்லூர், இளையமது கூடம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராம்மோகன் தலைமையில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது மேற்கண்ட பகுதி கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.10 ஆயிரம். இந்த சோதனையின் போது சுகாதார ஆய்வாளர்கள் துரை கார்த்திக், அமிர்தலிங்கம், ரங்கராஜன், கொளஞ்சியப்பன் ஆகியோர் உடனிருந்தனர். மேலும் கடை உரிமையாளர்களிடம் மீண்டும் தடை செய்யப்பட்ட பொருட் களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என எச்சரித்தனர்.

Related Tags :
Next Story