தஞ்சை அருகே தாக்கப்பட்ட சமூக ஆர்வலர் பரிதாப சாவு கொலைவழக்காக மாற்றி போலீசார் விசாரணை
தஞ்சை அருகே தாக்கப்பட்ட சமூக ஆர்வலர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தஞ்சாவூர்,
தஞ்சையை அடுத்த விளார் வடக்கு காலனியை சேர்ந்தவர் தர்மராஜ். இவருடைய மகன் ஆனந்தபாபு(வயது 33). சமூக ஆர்வலர். திருமணம் ஆகாத இவர், அந்த பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டராகவும் இருந்து வந்தார்.
விளார் வடக்கு காலனி பகுதியில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வரவில்லை. இது குறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பொதுமக்கள் முறையிட்டனர். இதையடுத்து அந்த பகுதி மக்களுக்கு லாரி மூலம் தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. அப்போது அந்த பகுதியை சேர்ந்த டிரைவரான குமார் மற்றும் அவருடைய மகன்கள் பெரிய கேனை எடுத்து வந்து தண்ணீர் பிடித்துள்ளனர்.
இதைப்பார்த்த ஆனந்தபாபு பெரிய கேனில் குடிநீர் பிடித்தால் மற்றவர்களுக்கு எப்படி குடிநீர் கிடைக்கும் என கூறி உள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்தவர்கள் தகராறை விலக்கி விட்டனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது இரண்டு தரப்பினரும் கோஷ்டியாக மோதிக்கொண்டனர். அப்போது குமாருக்கு ஆதரவாக அவருடைய மகன்கள் கோகுல்நாத் மற்றும் 17 வயதுடைய டிரைவர், 16 வயதான பிளஸ்-2 மாணவன் ஆகியோரும் வந்தனர்.
ஆனந்தபாபுக்கு ஆதரவாக அவருடைய தந்தை தர்மராஜ் மற்றும் உறவினர்கள் 2 பேரும் வந்தனர். இதில் இரும்புக்கம்பி, கட்டை, அரிவாள் ஆகியவற்றால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த ஆனந்தபாபு, அவருடைய தந்தை தர்மராஜ் ஆகியோர் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் எதிர்தரப்பில் காயம் அடைந்த குமார், அவருடைய மகன்கள் கோகுல்நாத்(21), பிளஸ்-2 மாணவன் ஆகியோரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் ஆனந்தபாபு சிகிச்சை பலன் இன்றி நேற்று காலை பரிதாபமாக இறந்தார். இதையடுத்து தர்மராஜ் கொடுத்த புகாரின் பேரில் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இது தொடர்பாக ஒருவரை கைது செய்தனர். இதேபோல் குமார் கொடுத்த புகாரின் பேரில் தர்மராஜ், பிரதீப், அரவிந்த் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story