திருக்காட்டுப்பள்ளி அருகே, கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க அனுமதி அளிக்க கூடாது கிராம மக்கள் மனு
திருக்காட்டுப்பள்ளி அருகே, கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க அனுமதி அளிக்க கூடாது என ஜமாபந்தியில் மாவட்ட வருவாய் அதிகாரியிடம், கிராம மக்கள் மனு அளித்தனர்.
திருக்காட்டுப்பள்ளி,
திருக்காட்டுப்பள்ளியை அடுத்த திருச்சினம்பூண்டி கிராமத்தின் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மணல் குவாரி அமைய உள்ள இடத்தில் அளவீடு செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பூதலூர் தாசில்தார் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேல் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது. அப்போது திருச்சினம்பூண்டி சுற்று வட்டார கிராம மக்கள், வக்கீல் ஜீவகுமார் தலைமையில் வந்து மாவட்ட வருவாய் அதிகாரியிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
மணல் குவாரி
திருச்சினம்பூண்டி ஊராட்சி எல்லைக்குட்பட்ட கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. கொள்ளிடம் ஆற்றில் கூட்டு குடிநீர் திட்டத்திற்காக ராட்சத ஆழ்குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் நீர் மட்டம் குறைந்து விவசாய நிலம் மற்றும் வீடுகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் வருவதில்லை. இதன் காரணமாக குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் மணல் எடுத்தால் கல்லணைக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே திருச்சினம்பூண்டி கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க அனுமதி அளிக்க கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story