அரியலூர் அருகே, மோட்டார் சைக்கிள்கள் மீது லாரி மோதல்: 4 வாலிபர்கள் பலி உறவினர்கள் சாலை மறியல்
அரியலூர் அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் மீது டிப்பர் லாரி மோதியதில் 4 பேர் பலியாயினர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வி.கைகாட்டி,
அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி அருகே உள்ள வெளிப்பிரிங்கியம் கிராமத்தை சேர்ந்தவர்கள் சதீஷ் (வயது 24), அஜித்(19), கைராம்(22), விக்கி(22) உள்பட 6 பேர் நேற்று இரவு 2 மோட்டார் சைக்கிள்களில் கீழப்பழுவூர் சென்றுவிட்டு மீண்டும் வெளிப்பிரிங்கியம் கிராமத்தை நோக்கி சென்று கொண்டு இருந்தனர். திருச்சி- சிதம்பரம் சாலையில் மயிலாண்டகொட்டாய் என்ற இடத்தில் சென்று கொண்டு இருந்தபோது எதிரே வந்த டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது. விபத்து ஏற்பட்டதும் லாரி டிரைவர் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள்களில் இருந்து தூக்கி வீசப்பட்ட 6 பேரும் படுகாயம் அடைந்தனர். இதில் அஜித், சதீஷ், விக்கி ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த மற்ற 3 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே கைராம் உயிரிழந்தார். மற்ற 2 பேருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் மற்றும் அரியலூர், கயர்லாபாத், விக்கிரமங்கலம், கீழப்பழுவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் விபத்தில் பலியானவர்களின் உடல் களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை உடனே கைது செய்யக்கோரி திருச்சி- சிதம்பரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவே அவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் திருச்சி- சிதம்பரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

Related Tags :
Next Story