கும்பகோணத்தில் சிறை கைதி திடீர் சாவு போலீசார் விசாரணை


கும்பகோணத்தில் சிறை கைதி திடீர் சாவு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 9 Jun 2019 4:45 AM IST (Updated: 9 Jun 2019 12:19 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணத்தில் சிறை கைதி திடீரென இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பாலக்கரையை சேர்ந்தவர் குமார். இவரது மகன் சரவணன்(வயது34). இவர் மீது கும்பகோணத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தநிலையில் பாலக்கரையில் உள்ள ஓட்டலில் சரவணன் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதுகுறித்து கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்து கடந்த 3-ந்தேதி கும்பகோணம் கிளை சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு சிறையில் சரவணனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார், சரவணனை சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சரவணன் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கும்பகோணம் கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story