ஓ.பன்னீர்செல்வம் குடும்ப அரசியல் செய்யவில்லை திவாகரனின் மகன் ஜெய்ஆனந்த் பேட்டி


ஓ.பன்னீர்செல்வம் குடும்ப அரசியல் செய்யவில்லை திவாகரனின் மகன் ஜெய்ஆனந்த் பேட்டி
x
தினத்தந்தி 11 Jun 2019 4:30 AM IST (Updated: 11 Jun 2019 12:30 AM IST)
t-max-icont-min-icon

ஓ.பன்னீர்செல்வம் குடும்ப அரசியல் செய்யவில்லை என்று திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் கூறினார்.

தஞ்சாவூர்,

அ.தி.மு.க.வில் குழப்பம் ஏற்பட்டு 1½ ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. அது இன்னும் தீரவில்லை. இப்போது குழப்பம் ஏற்பட்டுள்ளது எனக்கூறுவது ஏற்புடையதல்ல. குடும்ப அரசியலை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என கூறுகிறவர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.

அரசியலில் மக்களுக்கு சேவை செய்து வரும் தந்தையை தொடர்ந்து மகனும் சேவை செய்வதில் தவறில்லை. அப்படி செய்யக்கூடாது என எந்த சட்டமும் இல்லை. கொள்ளையடிக்க நினைப்பவர்கள் குடும்ப அரசியலை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குடும்ப அரசியல் செய்வதாக தெரியவில்லை. கொள்ளையடிக்க நினைப்பவர்களுக்குத்தான் இவை உறுத்தலாக உள்ளது.

தேர்தலில் அ.தி.மு.க. படுதோல்வி அடைந்ததன் மூலம் அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி வரலாறு காணாத அளவுக்கு குறைந்து விட்டது. காமராஜருக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் நிலை தமிழகத்தில் ஆனது போல் அ.தி.மு.க.வுக்கும் ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story