மாவட்ட செய்திகள்

தாளவாடி அருகே, யானை மிதித்து வன ஊழியர் பலி + "||" + Near Thalawadi, The elephant trampled wild staff kills

தாளவாடி அருகே, யானை மிதித்து வன ஊழியர் பலி

தாளவாடி அருகே, யானை மிதித்து வன ஊழியர் பலி
தாளவாடி அருகே யானை மிதித்து வன ஊழியர் பலியானார்.
தாளவாடி, 

தாளவாடியை அடுத்த ஆசனூர் அருகே உள்ள அரேப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தவசியப்பன் (வயது 75). வனக்காப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி ரத்தினம்மாள்.

தவசியப்பன் தனது வீட்டில் 4 எருமை மாடுகளை வளர்த்து வருகிறார். இந்த மாடுகளை அங்குள்ள வனப்பகுதியில் அவர் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். காலையில் மாடுகள் மேய்ச்சலுக்கு சென்றுவிட்டு மாலையில் வீட்டுக்கு வந்துவிடும். அதன்படி நேற்று முன்தினம் காலையில் 4 மாடுகளையும் அவர் மேய்ச்சலுக்கு விட்டார். ஆனால் மாலையில் ஒரு எருமை மாடு மட்டும் வரவில்லை. இதனால் அவர் அந்த மாட்டை தேடி வனப்பகுதிக்குள் சென்றார். இரவு வெகுநேரமாகியும் வீட்டுக்கு திரும்பவில்லை.

இதனால் நேற்று காலை தவசியப்பனை தேடி அவருடைய உறவினர்கள் வனப்பகுதிக்கு சென்றனர். அப்போது வனப்பகுதியில் உள்ள ஒரு ஓடையில் அவர் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். நேற்று முன்தினம் இரவு எருமை மாட்டை ேதடி தவசியப்பன் வனப்பகுதிக்கு சென்றபோது, காட்டு யானை மிதித்ததில் அவர் இறந்தது தெரிய வந்தது.

இதுபற்றி ஆசனூர் வனத்துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தவசியப்பனின் உடலை பார்வையிட்டனர். பின்னர் அவருடைய உடலை போலீசார் கைப்பற்றி சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.