மாவட்ட செய்திகள்

மன்னார்குடி அருகே தீ விபத்தில் 3 மாடுகள் படுகாயம் கூரை வீடு எரிந்து நாசம் + "||" + Three man dumped in a fire near Mannargudi

மன்னார்குடி அருகே தீ விபத்தில் 3 மாடுகள் படுகாயம் கூரை வீடு எரிந்து நாசம்

மன்னார்குடி அருகே தீ விபத்தில் 3 மாடுகள் படுகாயம் கூரை வீடு எரிந்து நாசம்
மன்னார்குடி அருகே தீ விபத்தில் 3 மாடுகள் படுகாயம் அடைந்தன. கூரை வீடு எரிந்து நாசமானது.
மன்னார்குடி,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள ராமாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மாறன்(வயது48). விவசாயி. இவர் கூரை வீட்டில் வசித்து வருகிறார். மாறன் நேற்று வீட்டை பூட்டி விட்டு மனைவி தேன்மொழியுடன் வெளியே சென்று இருந்தார்.


இந்த நிலையில் அவருடைய வீட்டின் கூரையில் திடீரென தீப்பிடித்தது. இந்த தீ மளமளவென வீடு முழுவதும் பரவியது.

இந்த தீ விபத்தில் வீட்டுக்கு அருகே கட்டப்பட்டிருந்த 3 மாடுகள் படுகாயம் அடைந்தன. அந்த மாடுகளுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். விபத்தில் வீடு முற்றிலும் எரிந்து நாசமானது.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்த மாறன் மற்றும் அவருடைய மனைவி தேன்மொழி உடனடியாக வீட்டுக்கு வந்தனர். அப்போது படுகாயம் அடைந்த மாடுகளையும், தீயில் எரிந்து நாசமான வீட்டையும் பார்த்து கதறி அழுதனர். தீ விபத்தில் 3 மாடுகள் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து மன்னார்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. ராகுல் வீட்டுக்கு மூத்த தலைவர்கள் படையெடுப்பு: காங்கிரஸ் தலைவராக நீடிப்பாரா? புதிய தகவல்கள்
ராகுல் காந்தி வீட்டுக்கு மூத்த தலைவர்கள் படையெடுத்து, ஆலோசனை நடத்தினர். அவர் காங்கிரஸ் தலைவராக நீடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
2. செட்டிகுளத்தில் தெர்மாகோலால் கட்டப்படும் வீடு ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்
பெரம்பலூர் அருகே செட்டிகுளத்தில் தெர்மாகோலால் கட்டப்படும் வீட்டினை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
3. பெரம்பலூர் வாரச்சந்தையில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கொட்டகைகள் தீப்பிடித்து எரிந்து நாசம்
பெரம்பலூர் வாரச்சந்தையில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கொட்டகைகள் நேற்று திடீரென்று தீப்பிடித்து எரிந்ததில் நாசமாயின.
4. குஜராத்தில் முன்னாள் முதல்-மந்திரி வீட்டில் ரூ.5 லட்சம் நகை, பணம் திருட்டு
குஜராத்தில் முன்னாள் முதல்-மந்திரி வீட்டில் ரூ.5 லட்சம் நகை, பணம் திருடப்பட்டது.
5. ரஷியா அருகே, நடுக்கடலில் தீப்பிடித்து எரிந்த கப்பல்கள்: மதுக்கூர் என்ஜினீயரின் நிலையை அறிய முடியாமல் தவிக்கும் பெற்றோர்
ரஷியா அருகே, நடுக்கடலில் கப்பல்கள் தீப்பிடித்து எரிந்தன. இந்த விபத்தில் சிக்கிய மதுக்கூரை சேர்ந்த என்ஜினீயரின் நிலையை அறிய முடியாமல் தவித்து வரும் அவருடைய பெற்றோரும், கிராம மக்களும் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.