மன்னார்குடியில் குடிநீர் இணைப்பில் பொருத்தப்பட்ட மின்மோட்டார்கள் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை


மன்னார்குடியில் குடிநீர் இணைப்பில் பொருத்தப்பட்ட மின்மோட்டார்கள் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 12 Jun 2019 4:30 AM IST (Updated: 12 Jun 2019 12:28 AM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடியில் குடிநீர் இணைப்பில் பொருத்தப்பட்ட மின்மோட்டார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மன்னார்குடி,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி பகுதியில் மக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதன்படி நகராட்சி பகுதியில் குடிநீர் இணைப்பில் சட்டவிரோதமாக மின்மோட்டாரை பெருத்தி கூடுதலாக குடிநீரை உறிஞ்சுகிறார்களா? என்பதை கண்டறிய மன்னார்குடி நகராட்சி ஆணையர் இளங்கோவன், நகரமைப்பு ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் குழுவினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் குடிநீர் இணைப்பில் பொருத்தப்பட்டு இருந்த மின் மோட்டார்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இ்துகுறித்து நகராட்சி ஆணையர் கூறியதாவது:-

நகராட்சி குடிநீர் இணைப்பில் மின் மோட்டார்களை பொருத்தி குடிநீரை உறிஞ்சுவது சட்டப்படி குற்றமாகும். சட்டத்தை மீறி குடிநீர் இணைப்பில் மின்மோட்டார்களை பொருத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அபராதமும் விதிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story