மாவட்ட செய்திகள்

வேதாரண்யத்தில் சூறைக்காற்று: மீனவர்கள் 3-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை + "||" + The fishermen did not go fishing for 3rd day

வேதாரண்யத்தில் சூறைக்காற்று: மீனவர்கள் 3-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை

வேதாரண்யத்தில் சூறைக்காற்று: மீனவர்கள் 3-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை
வேதாரண்யத்தில் சூறைக்காற்று வீசியதால் மீனவர்கள் 3-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை.
வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் கடந்த சில நாட்களாக கடலில் சூறைக்காற்று வீசி வருகிறது. இதனால் 5 ஆயிரம் பைபர் படகு மீனவர்கள் நேற்று 3-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை. மீன்பிடிக்க செல்லாததால் மீனவர்கள் தங்களது 1000 பைபர் படகுகளை பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.


மேலும் சூைறக்காற்று வீசுவதால் கடற்கரையில் மணல் பறப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

மீன்கள் வரத்து

மீன்பிடித்தடைக்காலம் நடைபெறுவதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாத நிலையில் பைபர் படகு மீனவர்களும் மீன்பிடிக்க செல்லாததால் வேதாரண்யம் பகுதியில் மீன்கள் வரத்து குறைந்துள்ளது.மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. சேதுபாவாசத்திரம் பகுதியில் சூறைக்காற்று: 2500 நாட்டுப்படகுகள் 4-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை
சேதுபாவாசத்திரம் பகுதியில் சூறைக்காற்று வீசுவதால் 2500 நாட்டுப்படகுகள் 4-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை.

அதிகம் வாசிக்கப்பட்டவை