மாவட்ட செய்திகள்

உத்திரமேரூர் அருகே விவசாய கிணற்றில் கிடந்த கோபுர கலசம் போலீஸ்நிலையத்தில் ஒப்படைப்பு + "||" + The tower in a farm well

உத்திரமேரூர் அருகே விவசாய கிணற்றில் கிடந்த கோபுர கலசம் போலீஸ்நிலையத்தில் ஒப்படைப்பு

உத்திரமேரூர் அருகே விவசாய கிணற்றில் கிடந்த கோபுர கலசம் போலீஸ்நிலையத்தில் ஒப்படைப்பு
உத்திரமேரூர் அருகே விவசாய கிணற்றில் கோவில் கோபுர கலசம் ஒன்று கிடந்தது. அதனை மீட்ட பொதுமக்கள் உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

உத்திரமேரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனத்தை சேர்ந்தவர் காளிதாஸ். முன்னாள் ஊராட்சித்தலைவரான இவருக்கு மருத்துவம்பாடி கூட்டுரோட்டில் விளைநிலமும், விவசாய கிணறும் உள்ளது.

பாலசுப்பிரமணியன் என்பவர் அந்த நிலத்தை குத்தகைக்கு எடுத்து பராமரித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கிணற்றில் மோட்டார் வேலை செய்யாததால், ஆண்டிதாங்கலை சேர்ந்த பாலசுந்தரம் என்ற மெக்கானிக் மோட்டாரை சரி செய்தார்.

பின்னர் கிணற்றில் இறங்கியபோது ஒரு சாக்கு பையில் மர்மப்பொருள் ஒன்று கட்டப்பட்டு கிடந்தது. பொதுமக்கள் உதவியுடன் அந்த பையை பிரித்து பார்த்தபோது, அதில் பழமையான கோவில் கோபுர கலசம் ஒன்று இருந்தது தெரியவந்தது.

உடனே நிலத்தின் உரிமையாளர் காளிதாஸ் மற்றும் கிராம பொதுமக்கள் அந்த கலசத்தை உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ராஜா தாமரைபாண்டியன் மற்றும் போலீசார், கோபுர கலசத்தை விவசாய கிணற்றில் வீசி சென்றது யார்? அது எந்த கோவிலை சேர்ந்தது? என்று விசாரித்து வருகிறார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. சென்னை மாதவரத்தில் என்கவுண்ட்டரில் ரவுடி சுட்டுக்கொலை
சென்னை மாதவரத்தில் போலீஸ்காரர்களை தாக்கிய பிரபல ரவுடியை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றனர்.
2. ஆப்கானிஸ்தானில் போலீஸ் சோதனை சாவடி மீது பயங்கரவாத தாக்குதல் : 11 பேர் உடல் சிதறி பலி
ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், தற்போது ஐ.எஸ். பயங்கரவாதிகளும் அங்கு காலூன்றி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
3. ‘‘இறுதிச்சடங்கு செய்ய எனது கடைசி மகளுக்கே உரிமை உண்டு’’ 92 வயது முதியவர், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு
எனது இறுதி சடங்கினை செய்வதற்கு கடைசி மகளுக்கே உரிமை உண்டு என்றும், தன்னை கவனிக்காத மகனுக்கு எந்த உரிமையும் இல்லை என்று கூறி 92 வயது முதியவர் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
4. பவானியில் போலீஸ்காரரை இரும்பு கம்பியால் தாக்கிய தொழிலாளி கைது
பவானியில், போலீஸ்காரரை இரும்பு கம்பியால் தாக்கிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
5. ஈரோடு வழியாக சென்ற ரெயில்களில் கொள்ளையடிக்கப்பட்ட 54 பவுன் நகைகள், 59 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு
ஈரோடு வழியாக சென்ற ரெயில்களில் கொள்ளையடிக்கப்பட்ட 54 பவுன் நகைகள், 59 செல்போன்களை ரெயில்வே போலீஸ் டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் உரியவர்களிடம் வழங்கினார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை