காஷ்மீரில் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட ராணுவ வீரர் - கண்டுபிடித்து தர கலெக்டரிடம் தாயார் கோரிக்கை மனு


காஷ்மீரில் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட ராணுவ வீரர் - கண்டுபிடித்து தர கலெக்டரிடம் தாயார் கோரிக்கை மனு
x
தினத்தந்தி 12 Jun 2019 4:20 AM IST (Updated: 12 Jun 2019 4:20 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட ராணுவ வீரரை கண்டுபிடித்து தருமாறு கலெக்டரிடம் அவரது தாயார் கோரிக்கை மனு அளித்தார்.

வேலூர்,

திருப்பத்தூர் தாலுகா மாரிவட்டம் பகுதியை சேர்ந்தவர் மனோன்மணி. இவர் நேற்று மாலை வேலூர் மாவட்ட கலெக்டர் ராமனிடம் கோரிக்கை மனு அளித்தார். அதில், எனது மகன் சபரிநாதன் இந்திய ராணுவத்தில் காஷ்மீர் பகுதியில் பணிபுரிந்து வந்தான். இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி சபரிநாதன் சக வீரர்களுடன் பணியின் நிமித்தமாக ஆற்றைக் கடக்கும்போது எதிர்பாராதவிதமாக அதில் தவறி விழுந்து விட்டதாகவும், அவருடன் மேலும் 9 ராணுவவீரர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் செல்போனில் 9-ந் தேதி காலை ராணுவவீரர் ஒருவர் தகவல் தெரிவித்தார்.

அந்த செல்போன் எண்ணை மீண்டும் தொடர்பு கொண்டு விபரங்கள் கேட்டோம். அப்போது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 10 பேரில் 7 பேரைக் காப்பாற்றி விட்டதாகவும், மீதமுள்ள 3 பேரைத் தேடி வருவதாகவும் தெரிவித்தார்.ஆனால் இதுவரை எனது மகன் குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. எனவே எனது மகன் சபரிநாதனை கண்டுபிடித்து தர கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

மனுவைப் பெற்றுக்கொண்ட கலெக்டர் ராமன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.


Next Story