வானவில் : விலை குறைந்த எல்.இ.டி. டி.வி.


வானவில் : விலை குறைந்த எல்.இ.டி. டி.வி.
x
தினத்தந்தி 12 Jun 2019 3:06 PM IST (Updated: 12 Jun 2019 3:06 PM IST)
t-max-icont-min-icon

டி.வி. தயாரிப்பு நிறுவனமான டிடெல் தற்போது விலை குறைந்த எல்.இ.டி. டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது.

17 அங்குலம் கொண்ட இந்த டி.வி.யின் விலை ரூ.3,699 மட்டுமே. இதில் 5 வாட் ஸ்பீக்கர் மற்றும் ஹெச்.டி.எம்.ஐ. போர்ட் வசதியும் உள்ளது. டி1 என்ற பெயரில் வந்துள்ள டி.வி.க்கு ஓராண்டு உத்தரவாதத்தையும் இந்நிறுவனம் அளித்துள்ளது. இந்த டி.வி.யை வாங்க விரும்புவோர் டிடெல் மொபைல் ஆப் மூலம் ஆர்டர் செய்யலாம்.

இதில் உள்ள ஹெச்.டி.எம்.ஐ. போர்ட் மூலம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கலாம். யு.எஸ்.பி. போர்ட் மூலம் மல்டிமீடியா வசதி, வி.ஜி.ஏ. இன்புட் வசதியும் இதில் உள்ளது.

இந்தியாவில் 33 சதவீத மக்கள் இன்னமும் டி.வி. வசதி இல்லாமல் உள்ளனர். இதனால் விலை குறைந்த தங்கள் தயாரிப்புக்கு மிகுந்த வரவேற்பு இருக்கும் என இந்நிறுவனம் உறுதியாக நம்புகிறது.

Next Story